Translate

Saturday 17 March 2012

ராஜபக்சேவின் அலறல்


undefined
வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

லண்டன், மார்ச். 17- அய்.நா. அவையில் இலங்கைக்கு எதிரான போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. வருகிற 22- ஆம் தேதி இதன் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.


இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டல் அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டு பொருளாதார தடை உள்பட பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். தீர்மானத்தை வெற்றி பெறச்செய்வதில் அமெரிக்கா முனைப்புடன் உள்ளது. இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கொழும்பில் அவர் கூறியதாவது:-

இலங்கை போரில் வெளிநாட்டு ஆலோசனைகளையோ, வெளிநாட்டு ராணுவத்தையோ நாங்கள் ஒருபோதும் ஈடுபடுத்தவில்லை. எங்களது வீரமிக்க படையினரால் உள்நாட்டில் வகுக்கப்பட்ட ராணுவ தந்திரங்களின்படி இந்தப் போரை நடத்தி வெற்றி பெற்றோம். படையை எங்களது தளபதிகளே நெறிப்படுத்தினர்.

எனவே மனித உரிமைகளை பாதுகாக்கவும், புனரமைக்கவும் வெளிநாட்டு தலையீடுகளோ, அவர்களின் அறிவுறுத்தல்களோ அவசியம் இல்லை. 

எங்கள் நாட்டை எவ்வாறு நடத்த வேண்டும், எங்கள் பிரச்சினைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்று வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எனவே அனைத்து இலங்கை மக்களும் அவர்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, என எந்தப்பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள அய்.நா. தீர்மானத்துக்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும். எதிர்க்கட்சிகளும் அனைத்து இலங்கை மக்களும் ஜாதி, மதம், இனம், அரசியல் போன்றவற்றை மறந்து இப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜபக்சே கூறினார். 

என்னதான் ராஜபக்சே இவ்வாறு காட்டுக் கூச்சல் எழுப்பினாலும், ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றத் தீர்மானம் நிறைவேறப் போகிறது. இவர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவது உறுதி!

No comments:

Post a Comment