பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு ஆலோசனைகளை நாடவோ, வெளிநாட்டுத் துருப்புக்களை ஈடுபடுத்தவோ இல்லை யயன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றுக் கூறியுள்ளார். எனவே மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியமில்லை எனவும் அவர் கூறினார். எனவே மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் புனரமைப்பு மற்றும் நல்லிணக்க செய்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், வெளிநாட்டுத் தலையீடுகளோ அல் லது அவர்களின் அறிவுறுத்தல்களோ இந்நாட்டுக்கு அவசியமில்லை என அவர் கூறினார்.
எமது வீரம் மிக்க படையினரால் மாத்திரம் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களின்படி இந்த யுத்தத்தில் போரிட்டு வென்றனர்.அவர்கள் எமது தளபதிகளால் நெறிப்படுத்தப்பட்டனர். தனது சொந்தக் கொள்கைகள் மற்றும் செயற்றிட்டங்களால் நாட்டை முன்னேற்று வதற்கான ஆற்றலையும் வலிமையையும் அறிவையும் இலங்கை கொண்டுள்ளது.
இந்நாட்டை எவ்வாறு நடத்த வேண்டும்? எமது பிரச்சினைகளை எப்படித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் வெளிநாட்டுச் சக்திகளிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. அனைத்து இலங்கையர்களும் அவர்கள் வடக்குத் தெற்கு மேற்கு எந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜெனிவாவில் ஏற்படுத்தப்பட்டதைப் போன்ற சூழ் நிலைக்கு எதிராக எழவேண்டும். நாட்டைப் பாதுகாப்பதற்கு மக்களுடன் கிளர்ந்தெழ வேண்டியது எதிர்க் கட்சிகளின் கடமையாகும். எதிர்க் கட்சிகளும் அனைத்து இலங்கை யர்களும் அவர்களின் இனம்,சாதி,மதம், அரசியல் என்பவற்றை மறந்துவிட்டு இத் தருணத்தில் இணைந்து ஒரே மக்களாக இப்பிரச் சினையை எதிர்கொள்ள வேண்டும்.
நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் என்ற வகையில் எமது பிரச்சி னைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீர்த்துக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் சமாதானத்தின் பலன்களை இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள மக்கள் அனுபவிக்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

No comments:
Post a Comment