ஜெனீவா பிரேரணையால் மக்களை அச்சுறுத்த யாழ்.நகர் முழுவதிலும் இராணுவம் குவிப்பு
சாகச நிகழ்வு என்னும் பெயரில் யாழ்.நகரம் முழுவதிலும் இராணுவத்தினரால் குவிக்கப்பட்டு பொது மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கைக்கு எதிரான பிரேரனை அமெரிக்காவால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான வாக்களிப்பு நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் யாழ்.துரையப்பாவில் சாகச நிகழ்வுகளை இராணுவத்தினர் ஒழுங்கு செய்துள்ளனர்
இலங்கைக்கு எதிரான தீர்;மானம் நிறைவேறும் என அஞ்சுவதால் அத்தருணம் பிரேரணைக்கான தமது ஆதரவை மக்கள் வெளிக்கொணராது தடுப்பதோடு பொது மக்களை திசை திருப்பும் நடவடிக்கையாகவே சாகச நிகழ்வு நடாத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்காக என்றுமில்லாதவாறு கடந்த இரு தினங்களா யாழ்.நகர் முழுவதும் இராணுவத்தினரால் நிரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயுதங்களுடன் இராணுவத்தினர் பகலிலும் இரவிலும் பஸ்களில் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இராணுவத்தினரை கொண்டு வந்து நிறுத்தியிருப்பதன் மூலம் மனோதத்துவ ரீதியில் பொது மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
என்ன நடந்தாலும் இலங்கைக்கு எதிரான தீர்;மானம் நிறைவேற வேண்டும் என யாழ்.மக்களும் ஆசைப்படுவதோடு தமது ஆதரவையும் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment