மனித உரிமை மீறல்கள் குறித்து ஆஸ்திரேலிய செனெட்டில தீர்மானம் நிறைவேறியுள்ளது! - இலங்கை மீது அழுத்தம் அதிகரிக்கிறது
எனினும் இலங்கை ஒரு சுயாதீனமான நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு விசாரணையை நடத்த முன்வர வேண்டும் எனவும் பிளேக் கூறியுள்ளார்.
ஆனால் இலங்கை அரச தரப்போ, போருக்கு பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும், அப்படி இருக்கும் போது மேற்குலகம் இப்படியான ஒரு தீர்மானத்தை கொண்டுவரத் தேவையில்லை என்றும் கூறுகிறது.
தாங்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை மேற்குலகம் கவனத்தில் எடுக்கவில்லை என்று அரசின் தேசிய பாதுகாப்புக்கன ஊடக மையத்தின் இயக்குநர் லக்ஷமண் ஹுலுகல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையும் ஆதரவு திரட்டுகிறது
இலங்கை அரசும் தமது தரப்பிலான வாதங்களை முன்வைத்து ஆதரவைத் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஜெனீவாவில் ராஜதந்திரிகளுக்கு அரசு சார்பில் ஒரு கடிதமும் எழுதப்பட்டுள்ளது.
அதில், அமெரிக்க முன்மொழுந்துள்ள தீர்மானத்தை முன்னெடுப்பதன் மூலம், தனது வரம்புகளை ஐ நாவின் மனித உரிமைகள் கவுன்சில் மீறுகிறது என்று இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இறையாண்மையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் ஐ நா வின் மனித உரிமைகள் குழு செயல்படக் கூடாது எனவும் கூறியுள்ள இலங்கை அரசு, ஐ நாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகள் மீறப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மீண்டும் கையில் எடுப்பது தேவையில்லாத ஒன்று என்றும் மறைமுக காரணங்களுக்காக வளர்ந்து வரும் நாடுகள் குறிவைக்கப்படுகின்றன எனவும் இலங்கை தரப்பு எழுதியுள்ளது.
அனைத்து மக்களும் இணக்கப்பாட்டுடன் சமத்துவத்துடன் கூடிய கௌரவமான வாழ்க்கைகை முன்னெடுத்து பல்லின சமூகத்தில் வாழ எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு இப்படியான தீர்மானம் குந்தகம் ஏற்படுத்தக் கூடும் எனவும் இலங்கை கருத்து வெளியிட்டுள்ளது
MOTION PASSED ON 21 March 2012 at Australian SENATE செனட் சபையில் 2012 மார்ச் 21 தீர்மானமான மனு
1) The Senate notes
1) The Senate notes
செனட் சபை பின்வருபனவற்றைக் கருத்தில் கொள்கிறது:
a) On the 13th of February 2012, the then Foreign Minister Kevin Rudd issued a media release in response to the Sri Lankan Lessons Learned and Reconciliation Commission (LLRC) final report that stated:
2012 பிப்ரவரி 13ம் நாளன்று, அப்போதைய வெளியுறவு அமைச்சர் கெவின் ரட், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இணக்க ஆணையம் (LLRC) வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் ஒரு ஊடக செய்தியை வெளியிட்டார். அதில்:
i) The LLRC report contains constructive proposals for advancing reconciliation and reconstruction, including through reducing the presence of security forces in the North, care of internally displaced persons and media freedoms;
சமரசம் மற்றும் புனரமைப்பை முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான திட்டங்கள் LLRC அறிக்கையில் உள்ளது, குறிப்பாக வடக்கில் பாதுகாப்புப் படைகள் குறைக்கப்படுதல், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான சேவைகள், மற்றும் ஊடக சுதந்திரம் என்பன;
ii) The Australian Government has consistently urged Sri Lanka to investigate all allegations of crimes committed by both sides to the conflict, including those raised in the UN Secretary-General's Panel of Experts report;
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் அறிக்கையில் உள்ளபடி, இரு தரப்பிலுமான போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கு, அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது;
iii) In light of the report's failure to comprehensively address such allegations, the government continues to call on Sri Lanka for all such allegations to be investigated in a transparent and independent manner.
இலங்கை அரசாங்கம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான முறையில் விசாரணை அமைந்திராதபடியால், போர்க்குற்றங்கள், ஒளிவுமறைவில்லாத வகையில் இதில் சம்பந்தப்படாதவர்களால் விசாரிக்கப்பட வேண்டும் என வேண்டுகிறது.
2) The Senate calls on the Australian government, as a minimum, to support efforts to secure a US initiated resolution on Sri Lanka at the 19th Session of the UN Human Rights Council, through the Australian permanent representative in Geneva.
குறைந்தபட்சம், ஜெனீவாவில் உள்ள அவுஸ்திரேலிய நிரந்தர பிரதிநிதி மூலம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19வது அமர்வில் ஐக்கிய அமெரிக்காவின் முன்னெடுப்பில் பிரேரிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆதரிக்க வேண்டுமென, செனட் சபை அழைப்பு விடுக்கின்றது.
No comments:
Post a Comment