நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது 2009-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியிலிருந்த போது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 2009 - ல் புதுவையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீமான் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.கடந்த 2009ம் ஆண்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கலந்துகொண்டு சீமான் பேசிய போது, அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராகப்பேசியதாக ஒதியஞ்சாலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குக்காக அடிக்கடி புதுச்சேரி சென்று நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார் சீமான். இந்நிலையில் இன்று புதுச்சேரி நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவித்து உத்தரவிட்டது.


அவர் பேசிய இறையாண்மைக்கு எதிரான வாசகம் என்பது இதுதான் சொல்லப்படுகிறது: 'ஏய் சிங்களவனே ! எங்கள் மீனவனை நீ தாக்கினால், இங்கே (தமிழகத்தில் படித்துக் கொண்டிருக்கிற) உங்கட மாணவனை தாக்குவேன் '

இதை இன்று விசாரித்த நீதிபதி புவனேஸ்நரி இது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசப்பட்டது அல்லவென்றும், இலங்கிக்கு எதிராகப் பேசப்பட்டதுதானென்றும் கூறி சீமான் அவர்களை விடுதலை செய்தார்.

'ஏய் சிங்களவனே ! எங்கள் மீனவனை நீ தாக்கினால், இங்கே (தமிழகத்தில் படித்துக் கொண்டிருக்கிற) உங்கட மாணவனை தாக்குவேன் ' - இனி இந்த வாசகம் நம் ஒவ்வொருவரின் திருவாசகம் ஆகட்டும் !

செய்தி - நிலவரசு கண்ணன்