Translate

Saturday, 17 March 2012

போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தன: கோத்தபாய


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பல மேற்குலக நாடுகள் மனிதாபிமான மீட்புப் பணிகளை இடைநிறுத்த முயற்சித்தன.  நாட்டின் தலைவர் மற்றும் படைகளின் சேனாதிபதி என்ற ரீதியிலும் இந்த அழுத்தங்களைக் கண்டு ஜனாதிபதி அஞ்சவில்லை.
இறுதிக் கட்ட போரின் போது மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. புலிகளின் வான்படை பலம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. அதனை முறியடிப்பதற்கு ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்.
ஒரே நோக்கத்தில் போரை முன்னெடுத்த காரணத்தினால் வெற்றியீட்ட முடிந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழக பழைய மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment