வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை ஆக்கிரமித்து அங்கிருந்து கல்லறைகளும்,
நினைவுக்கற்களும் அகற்றப்பட்டு பாரிய அளவிலான புத்தர் சிலை அமைக்கப்பட்டு சிலை திறப்பு நிகழ்வு நேற்று பிரமாண்டாக நடைபெற்றிருக்கின்றது. 611 வது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினரினாலேயே துயிலும் இல்லக் காணி அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. துயிலும் இல்லக் காணி அபகரிப்பிற்கு வவுனியா பிரதேச செயலர் துணை நின்றதாகவும், இராணுவத்தின் பெயருக்கு அவரே காணிப் பதிவினை மாற்றம் செய்து கொடுத்ததாகவும் தெரியவந்திருக்கின்றது.
06 அடி உயரம் உள்ள குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டதுடன், அதே காணியில் பத்திற்கும் மேற்பட்ட கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர். ஆயிரத்து ஐநூறு வரையிலான மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள மாவீரர் இல்லத்தின் நினைவுக்கற்களும், கல்லறைகளும் இராணுவத்தினரால் புள்ளோசர்கள் துணையுடன் இடித்து அகற்றப்பட்டு வேலி ஓரத்தில் அணைபோல குவிக்கப்பட்டிருந்ததாக கண்ணீர் மல்க கவலை வெளியிட்டுள்ள மக்கள், இந்தச் சம்பவங்களை இராணுவத்தினர் மேற்கொள்வதற்கு தமிழர்களான வவுனியா பிரதேச செயலர் போன்றவர்கள் துணை நிற்பது மிகுந்த கேவலமானது என்று தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment