Translate

Saturday, 17 March 2012

சம்பந்தன் அமெரிக்க அதிகாரியொருவருடன் இரகசிய பேச்சுவார்த்தை


undefined
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், அமெரிக்க அதிகாரியொருவருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி அகுல் தேஷான் என்பவருடன், சம்பந்தன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொழும்பு அமெரிக்கத் தூதரகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக 15 பக்க மகஜர் ஒன்றை சம்பந்தன், மனித உரிமை பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார். இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்பதனை வலியுறுத்தும் வகையில் இந்த மகஜர் அமைந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment