Translate

Friday, 30 March 2012

வெளிநாடுகளால் நியமிக்கப்பட்ட சில தூதுவர்கள் புலிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர் -வீரவன்ச


நாட்டைக்கட்டியெழுப்ப நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து ஒரு கொடியின் கீழ் செயற்பட வேண்டும். அதி காரிகளின் செயற்பாடுகள் போதாது, மக்களுக்கும் உணர்வு வரவேண்டும்.அப்பொழுது தான் நாட்டை அபிவிருத்திசெய்ய முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு எல்லா நலன்களும் கிடைப்பதோடு அரச சொத்துக்களை விற்கவுமில்லை. அபிவிருத்தி நோக்கில் நாடு சென்றுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள உலப்பனை மாவில்லா தோட்டத்தில் சிறிதரன்புர வீடமைப்பு திட்டத்தை திறந்து வைத்து விழாவில் கலந்துக் கொண்டு பேசுகையிலே இதனைத் தெரிவித்தார்.இதற்கான ஏற்பாட்டை நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொண்டிருந்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:தமிழ் இராணுவ வீரர் யுத்தத்தில் இறந்ததையிட்டு அவருக்கு கௌரவம் அளிக்கும் முகமாக சிறிதரன்புர என்ற பெயர் வீடமைப்பு திட்டத்திற்கு சூட்டப்பட்டது.
இப்பொழுது நாட்டில் யுத்தம் முடிந்தது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் சமாதானமாக வாழுகின்றனர். இன்று வீடமைப்பு திட்டம் முதல் பல அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகிறது. முன்பு ஜே.ஆர். காலத்தில் வெளிநாடுகளால் நியமிக்கப்பட்ட சில ஆணையாளர்கள் (தூதுவர்கள்) புலிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். அரசின் பிரதிநிதியாக செயற்படவில்லை.

No comments:

Post a Comment