Translate

Monday 26 March 2012

யேர்மனியில் தொடரும் “அவர்களுக்கும் ஆசைகள் உண்டு ” கவனயீர்ப்பு நிகழ்வு ..


யேர்மனியில் நேற்று - Landau மற்றும் Saarbrücken நகரங்களில் தாயக சிறுவர்களின் அவல நிலைமைகளை அத்தோடு அவர்களின் எதிர்கால ஆசைகள் என்ன என்பதை விளக்கும் முகமாக தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது .


இளையோர்களின் மனித நேய வேலைத்திட்டத்தை கண்டறிந்த யேர்மன் மக்கள் மிகவும் ஆவலாக அவர்களுடன் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனவழிப்பை பற்றி வேதனையுடன் அறிந்துகொண்டார்கள் . அத்தோடு தாயக சிறுவர்களின் நிலைமைகளை தமிழ் இளையோர்கள் மிகவும் சிறப்பாக எடுத்துகாட்டினார்கள் .

இளையோர்களின் முயற்சியால் உள்ளூர் பத்திரிகையிலும் இவ் நிகழ்வின் தகவல் அறிவிக்கப்பட்டது . அத்தோடு Saarbrücken நகரில் அவ் மாநில பிரதம மந்திரி Annegret Kramp-Karrenbauer அவர்களும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை வாழ்வை சிறப்பாக சிறுவர்களின் தகவல்களை பெற்றுக்கொண்டார் .அத்தோடு இவ் நிகழ்வில் பல்வேறு மனிதநேய அமைப்புகளும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள் .

தமிழ் இளையோர் அமைப்பினரின் தொடரும் இவ் கவனயீர்ப்பு நிகழ்வு Frankfurt, Wuppertal, Berlin, Göttingen, Köln நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்

No comments:

Post a Comment