Translate

Friday 30 March 2012

பிரதமரின் கூற்றை உலக நாடுகள் கேள்விப்பட்டிருந்தால் குறைந்தளவு வாக்குகளே கிடைத்திருக்கும்

பிரதமர் டி.எம். ஜயரட்ன அண்மையில் வெளியிட்டிருந்த கருத்தை உலக நாடுகள் கேள்விபட்டிருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இன்னும் குறைந்தளவு வாக்குகளே இலங்கைக்கு கிடைத்திருக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் தொடர்பில் பிரதமர் கருத்து வெளியிட்டிருந்தார். ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்துவதற்கு முன்னர் புத்திஜீவிகளின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.


அரசாங்கத்தின் இந்த இரட்டை நிலைப்பாட்டை உலக நாடுகள் தெரிந்து கொண்டிருந்தால் இலங்கைக்கு மிகக் குறைந்தளவான வாக்குகளே கிடைத்திருக்கும் என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமரின் இந்தக் கருத்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாரியளவிலான சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment