ஜெனிவா தீர்மானம் சிறீலங்விற்கே வெற்றி : முட்டாளாக்கும் சிங்கள தலைமைகள்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார,
அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாட்டின் அழுத்தங்களுக்கு மத்தியில், சிறீலங்கா போன்ற சிறிய நாட்டிற்கு, ஆதரவாக, மனித உரிமை பேரவையில் பல நாடுகள் வாக்களித்தமையானது பாரிய வெற்றி என தெரிவித்துள்ளார்.
மேலும் பல நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளாமல், ஒதுங்கியதும் சிறீலங்காவிற்கு கிடைக்த வெற்றியெனவும் அவர் கூறியுள்ளார்.
உலகில் சகல நாடுகளுடனும் நட்புறவாக செயற்பட்டு, எந்த அணிக்கும் சாராது இருப்பது, தொடர்பில் சிறீலங்கா பெற்றுள்ள பலத்தை ஜெனிவா மனித உரிமை பேரவையில் உலகத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டது.
சிறீலங்காவிற்கு எதிராக சர்வதேச ரீதியில் ஏற்படும் செயற்பாடுகள் தொடர்பில் கட்சி என்ற வகையில் ஜனநாயக இடதுசாரி முன்னணி தயார் நிலையில் இருக்கும் எனவும் அந்த கட்சியின் செயலாளருமான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 9 மேலதிக வாக்குகளால் அமோக வெற்றி பெற்றிருந்தது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும், வாக்களிப்பில் கலந்து கொள்ளால் 8 நாடுகளும் இருந்தன.
இவ்வாக்கெடுப்பு தொடர்பில் சிங்கள மக்களுக்கு தெளிவுப்படுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. அவர்கள் சொல்வது இதுதான்.
சிறீலங்காவிற்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் 8 நாடுகளும் இருந்தன. அமைதி காத்த 8 நாடுகளும் எமக்கு ஆதரவாக வாக்களித்தால் 23 வாக்குகள் கிடைத்திருக்கும். ஆகையால் அமெரிக்காவின் தீர்மானம் 1 வாக்கின் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருக்கும் பரப்புரை செய்து வருகின்றது.
இவர்கள் ஒரு விடயத்தினை மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அமைதி காத்த 8 நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் பட்சத்தில் 32 வாக்குகள் கிடைத்திருக்கும். அதன் அடிப்படையில் குறித்த தீர்மானம் 17 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கும். இந்த உண்மையை யார் புரிய வைக்கப் போகின்றார்கள்?

No comments:
Post a Comment