ஈழத் தமிழ் மக்கள் இந்தியாவுடன் ஓர் சுமூகமான நிலையை அடைந்துவிடக் கூடாது என்பதற்காக இலங்கை அரசின் புலனாய்வுத்துறை பல்வேறுபட்ட சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்தக் கூட்டுச் சதியின் செயல்பாட்டு வீரர்களாக ஈழத் தமிழர்கள் சிலர் தெரிவு செய்யப்பட்டு ஐரோப்பாவின் பல பகுதிகளில் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
ஜெனிவா நிகழ்வுகளைத் தனித்து நின்று சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து பாகிஸ்தானின் உதவியை நாடிய இலங்கைப் புலனாய்வுத்துறை, பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. யின் துணையுடன் பல நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பகையுணர்வைத் தொடர்ந்தும் பேணி வருவதற்கான செயற்பாட்டுக்காகச் சில ஈழத் தமிழர்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனம் பயிற்சி அளித்துள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு நடவடிக்கையாக பிரித்தானியாவில் இருந்து செயற்பட்டு வரும் இலங்கைப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், ஆங்கில அறிவு பெற்ற சில தமிழர்களைத் தேர்வு செய்து, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். அப்படி அறிமுகம் செய்யப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டவர்களில் ஈழத்து எழுத்தாளர் பெண்மணி ஒருவரும், இலங்கை அரசின் ஆதரவாளரான கே.பி. யின் முகவர் ஒருவரும், மறைந்த முன்நாள் ‘ஈரோஸ்’ அமைப்பின் தலைவர் ஒருவரின் மகனும் முக்கியமானவர்கள்!
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் இந்தியாவுடனான ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துவிடக் கூடாது என்பது இலங்கை புலனாய்வினதும் பாகிஸ்தான் புலனாய்வினதும் இன்றைய கொள்கை முடிவாகச் செயற்பாட்டில் உள்ளது. இலங்கையின் முப்படைகளும், புலனாய்வுத் துறையும் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ் இனத்தை அழித்தொழிக்கும் பணிகளைத் தவிர வேறு எதுவும் செய்தது கிடையாது.
இந்த அழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானின் நேரடித் தலையீடு இப்போது தான் முதன் முறையாக வெளிப்பட்டுள்ளது. இந்தச் சதிச் செயலுக்கு ஈழத்தின் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதன் மூலம் அச்சத்தையும் கவலையையும் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில் ஈழத் தமிழர்கள் வீழ்த்தப்பட வேண்டும், பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்தியா வீழ்த்தப்பட வேண்டும். எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், இந்த இரு புலனாய்வுத் துறையினரும் கைகோர்த்துள்ளனர் ஐரோப்பாவில்.
No comments:
Post a Comment