Translate

Thursday, 8 March 2012

காணாமல் போனவர்களின் நிலை என்ன? ஜெனிவாவில் கேள்வி! பதிலளிக்காத இலங்கை!


காணாமல் போனவர்களின் நிலை என்ன? ஜெனிவாவில் கேள்வி! பதிலளிக்காத இலங்கை!
இலங்கையில் காணாமற் போனவர்களில் 5,761 பேரின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான செயற்குழு ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை எனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் இலங்கை அரசு பதிலளிக்கவில்லை எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு எதிராகப் பக்கச்சார்பற்ற விசாரணைகளோ அல்லது உள்ளக விசாரணைகளோ நடத்தப்படவில்லை.

காணாமல் போனவர்கள் விடயத்தில் அவர்களுடைய உறவினர்களுக்குப் பொலிஸ், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற தற்போதுள்ள பொறிமுறைகள் உதவவில்லை எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

காணாமல் போனவர்கள் தொடர்பில் தேவையான தகவல்களை அவர்களுடைய உறவினர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. தடுப்புக்காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் பெயர்ப்பட்டியல் எதுவும் தயாரிக்கப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களை அதனைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் வைக்கப்பட்டிருக்கில்லை.

காணாமல் போனவர்கள் தொடர்பில் 12,460 பேருடைய தகவல்கள் காணாமல் போனவர்கள் தொட்ர்பான செயற்குழுவினால் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதில் 5,671 பேருடைய விவகாரம் இன்னும் தீர்க்கப்படாததாகவே இருக்கின்றது எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment