இலங்கை அரசாங்கத்தினால் இறுதிப் போரின்போது நடைபெற்ற மீறல்களை விசாரித்து அறிவதற்காக உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும்
பிரேரணைக்கான வரைபை அமெரிக்கா நேற்று மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பித்துள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை தவிர்க்கும் நோக்குடன் மகிந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்தக் கோருவதானது, இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியென அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. பிரேரணையின் உள்ளடக்க வரைவு தொடர்பிலான, அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களுடன், இந்தப் பிரேரணை சபையின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் கொண்டு வரப்படும்.
அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த பிரேரணை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நாதம் ஊடகசேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு இன்று சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவினை அங்கத்துவ பலப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் முடியும்.
No comments:
Post a Comment