Translate

Thursday, 22 March 2012

சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - ஜெனிவாவில் வெற்றி


சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - ஜெனிவாவில் வெற்றி
இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை ஐக்கிய அமெரிக்கா சற்று முன்னர் ஐநா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் முன்வைத்துளதுடன்,
அது தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெற்றதில் அமெரிக்காவின் தீர்மானம் வாக்களிப்பில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நாடுகளில் 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட்ட 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்திக்கின்றன.
கியூபா, சீனா, ஈக்குவடோர், ரஷ்யா, உருகுவே, கிரிஸ்கிதான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மாலைதீவு, பங்களாதேஷ், நைஜிரியா, உகண்டா உட்பட்ட 15 நாடுகளே எதிர்த்து வாக்களித்திருக்கின்றன.
இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றது.

No comments:

Post a Comment