ஜெனிவாவில் தாக்குதல் நடத்தினாலும் அது இலங்கை மீது படாது – பசில் :இலங்கைக்கு சர்வதேச நண்பர்கள் அதிகரித்துள்ளதால்,..
மனித உரிமை பிரச்சினையை அடிப்படையாக கொண்டு. ஜெனிவாவில் இலங்கைக்கு மீது தாக்குதல் நடத்தினாலும் அது இலங்கை மீது படாது எனவும், இலங்கைக்கு சர்வதேச நண்பர்கள் அதிகரித்துள்ளதால், மேற்குலக நாடுகள் இலங்கை மீது எவ்வாறான பொருளாதார தடைகளை விதித்தாலும் இலங்கைக்கு அவற்றை எதிர்கொள்ளும் பலம் இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை புதிய ஏற்றுமதி சந்தையை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அரசியல் பிரச்சினைகளில், பொருளாதார விடயங்களை அடிப்படையாக எடுத்து எடுத்து கொள்ளக் கூடாது. எனினும் மேற்குலக நாடுகள் அதனை செய்கின்றன. இதன் மூலம் எமது இறையாண்மைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இலங்கைக்கு மாத்திரமல்லாது, முழு ஆசியாவின் பொருளாதாரத்திற்கும் அழுத்தங்களை கொடுக்க மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றன எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment