Translate

Tuesday, 27 March 2012

உகண்டாவில் இலங்கைக்குத் தோன்றியுள்ள மேலும் ஒரு தலையிடி!


உகாண்டாவின் கம்பலா நகரில் இடம்பெறவுள்ள அனைத்து நடாளுமன்றக் குழு அமர்வுகளில் சிறிலங்காவிற்கு எதிராக, தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம், ஏப்ரல் 6 ஆம் திகதி வரையில் கம்பலாவில் அனைத்து நாடாளுமன்றக் குழு அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அதன்போது சிறிலங்காவின் எதிர்க்கட்சிகளினால் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜயலத் ஜயவர்த்தன மீது நடத்தப்பட்ட தாக்குதல், சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, ஜெனிவா அமர்வுகளில் கிடைக்கப்பெற்ற அனுபவங்களைக் கொண்டு, அனைத்து நாடாளுமன்றக் குழு அமர்வுகளை வெற்றிகரமாக எதிர்நோக்கத் தயாரென ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment