Translate

Tuesday 27 March 2012

ஜெனிவாத் தீர்மானத்தால் அச்சப்பட எதுவுமில்லை


அமைச்சர் பீரிஸ் விளக்கம்

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை கள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்ட போதிலும் கூட இலங்கை அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.


ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லப்படாததனால் இலங்கை மீது ஐ.நா சபையினால் தடைகள் எதனையும் விதிக்க முடியாது எனவும் அமைச்சர் பீரிஸ் கொழும் பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் ஜெனிவா கூட்டத்தொடரில் பங்குகொண்ட அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மகிந்த சமரசிங்க, டக்ளஸ் தேவானந்தா, ஹக்கீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜெனிவாத் தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை எனத்தெரிவித்த அமைச்சர் பீரிஸ் இத் தீர்மானம் ஒரு உள்நாட்டுப் பிரச்சினையை சர்வதேச விவகாரமாக்கியிருக்கின்றது எனவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பில் அமைச்சர் பீரிஸ் மேலும் கூறியதாவது, ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் எமது நிலைபாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எந்தவொரு வெளிநாட்டு அழுத்தத் திற்கும் நாம் அடிபணியப் போவதில்லை. அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக எமக்கு ஆதரவளித்த நாடுகள் மற்றும் வாக் களிப்பில் கலந்துகொள்ளாத நாடுகள் என்பன எமது நிலைப்பாட்டை பாராட்டியுள்ளன.

ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தமது பணியை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என அமைச்சர் கூறினார். ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கை தூதரங்கள் சிலவற்றை மூடிவிட்டு போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, நோர்வே, சுவீடன் நாடுகளுடனான விவகாரங்களை மேற்பார்வை செய்வதற்கு ஒரேயயாரு தூதரகத்தை மாத்திரம் அமைக்க தீர்மானிக்கப்பட் டுள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும் பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதரகங்கள் தொடர்ந்தும் இருக்கும் எனவும் மூடப்படும் தூதரகங்களுக்கு பதிலாக ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா, ஆசிய நாடுகளில் தூதரகங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் அச் செய்திகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறுகையில், எம்மிடம் மட்டுப் படுத்தப்பட்டுள்ள அளவிலான வளங்களே உள்ளன. இவ் வளங்கள் வியூக முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கு பகிரப்படவேண்டும் உதாரணமாக ஆபிரிக்காவில் எமக்கு நான்கு தூதரங்களே உள்ளன. எனவே அங்கு கவனம் செலுத்தப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம். இது ஜெனிவா பிரேரணைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். இதேவேளை ஜெனிவாப் பிரேரணை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த கருத்தின் பின்னர் ஜெனிவாவில் ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பதற்கு இந்தியத் தூதுக் குழுவினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­வுக்கு இந்தியப் பிரதமர் எழுதிய கடிதம் குறித்தும் செய்தியாளர்கள் வினவினர். அப்போது இந்த முயற்சிகளில் அல் லாமல் இறுதி வாக்கெடுப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் பீரிஸ் பதிலளித்தார்.

அத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறியதன் பின்னர் அவர்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்பது பிரச்சினையில்லை. இறுதிவாக்கெடுப்பில் நாம் கவனம் செலுத்தவேண்டும். அந்த உரையில் நேரம், தன்மை, வலிமை என்பன ஜெனிவாவில் புலப்படக் கூடிய மாற்றத்தை ஏற்படுத்தியது என அவர் கூறினார். இந்தியாவின் தீர்மானம் அதிர்ச்சியாக அமைந்ததாகவும் இந் நடவடிக்கையினால் இலங்கை அரசாங்கம் ஏமாற்றம் அடைந்ததாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

No comments:

Post a Comment