Translate

Wednesday, 21 March 2012

வன்முறைகளை கைவிடச் சொல்லி புலிகளைக் கேட்டேன் - அவாகள் தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர்! சுமந்திரன் கூறினார்.


தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்து உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன். இவர் இது குறித்து முக்கியமாக தெரிவித்து இருப்பவை வருமாறு:
புலிகளை தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்க முடியாது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி இந்நிலைப்பாட்டில் இருக்கவில்லை. புலிகள் பயங்கரவாத அமைப்பு ஒன்றை போல செயல்பட்டனர். இலங்கைக்குள் தனி நாடு ஒன்றை நிறுவ முயன்றனர்.
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளை தொடர்ந்து இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர். இது சரியான செயல் ஆகாது. வன்முறைகளை கைவிடச் சொல்லி எழுத்துமூலம்கூட புலிகளிடம் கேட்டு இருந்தேன். புலிகளின் உதவிகளை நான் எப்போதும் பெற்று இருக்கவில்லை.

No comments:

Post a Comment