அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட தெரிவிப்பதில்லை - விமல் வீரவங்ச
அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன என்பவர், மிலிந்த மொரகொடவின் நண்பர் எனவும் அவர் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட தெரிவிப்பதில்லை எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இப்படியான ஒருவர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவார் என நம்புவது கடினம்.
யுத்தம் செய்யும் போது, இந்த துரைமார், யுத்தத்தை செய்ய முடியாது என கூறிவந்தனர். எனினும் யுத்தத்தை நல்லபடியாக செய்து கொண்டு செல்லும் போது, அவர்கள் அரசாங்கத்திற்கு தாவினர். அவர் கூறியது போல் நான் தெரிவித்த கருத்து, அரசாங்கத்தின் கருத்து அல்ல. நாங்கள் அரசாங்கத்தில் இருப்பது போல் எங்களுக்கும் தனியான கொள்கைகள் உள்ளன. அந்த கொள்கையை நாட்டுக்கு தெரிவிக்க எமக்கு உரிமை உள்ளது.நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சந்தர்ப்பத்தில், அதற்கு எதிராக மக்களை அணித்திரட்டி, அதனை தோற்கடிக்க முயற்சிகளையும் அர்ப்பணிப்புகளையும் செய்ய வேண்டியது அவசியமாகும் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment