ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளுக்கு நம்பிக்கையைக் கொடுத்து, வாழ்வாதாரத்தையும் பல உதவிகளையும் செய்யும், தர்மஸ்தாபனமாக விளங்குவது நம்பிக்கை ஒளியாகும். கடந்த பல வருடங்களாக பிரித்தானிய மக்களின் நன்மதிப்பைப் பெற்று இயங்கிவரும் இவ்வமைப்பு, பிரித்தானியாவில் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
சில தர்மஸ் தாபனங்கள் போல ஒரு முறை உதவிகளை மட்டும் வழங்காமல், நம்பிக்கை ஒளியானது மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப உதவியுள்ளது. குறிப்பாக சேனைப் பயிர்ச்செய்கைக்கு உதவுதல், 3,000 வாழைக் கண்டுகளைக் கொடுத்து உதவுதல் போன்றவை கிராமம் கிராமமாக நடைபெற்று வருகிறது. மக்களை மீளவும் பயிர்ச்செய்கைக்கு ஊக்குவித்து, அவர்கள் வாழ்வாதாரங்களை அவர்களே சமாளித்துக் கொள்ள நம்பிக்கை ஒளி உதவி புரிகிறது.
லண்டனில் இயங்கிவரும் நம்பிக்கை ஒளி அமைப்பு தற்போது தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்குடன் புதிய தலைமை அலுவலகம் ஒன்றையும் திறக்கவுள்ளது. இத் திறப்பு விழா நாளை 18.03.2012 (ஞாயிறு) NW லண்டனில் நடைபெறவுள்ளது. நம்பிக்கை ஒளி அமைப்புக்கு உதவும் மக்களும், பொதுமக்களும், மற்றும் அனைத்து ஆர்வலர்களும் இதில் கலந்துகொள்ளலாம் என்பதனை எமது அமைப்பு அறியத்தர விரும்புகிறது. மாலை 3.00 மணிக்கு இந் நிகழ்வுகள் கீள் காணும் முகவரியில் ஆரம்பமாகும் என்பதனை நம்பிக்கை ஒளி அறியத்தருகிறது.
ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளுக்கு உதவு, இது நாள்வரை எமக்கு உறுதுணையாக நின்ற பிரித்தானியா வாழ் தமிழர்களின் கரங்களை நாம் நன்றி உணர்வோடு பற்றி நிற்கிறோம். முதியோர் இல்லம், விதவைகளின் மறுவாழ்வு என மேலும் சில வாழ்வாதாரத் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்த இருப்பதால், மக்கள் ஆதரவும் தமது ஆலோசனைகளை வழங்குவதையும் நாம் வரவேற்க்கிறோம். நம்பிக்கை ஒளியின் திடமான வளர்ச்சி ஈழத் தமிழர்களின் விடிவுக்கான ஒரு நம்பிக்கையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
Starting at 3.00 Pm
Unit G05
10, Courtenay Eastlane Business Park,
Eastlane
HA9 7ND
contact : roh@theroh.org
charity number: 1146115.
No comments:
Post a Comment