இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் பாரிய அளவில் குறைவு
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை உறுதியாக எதிர்க்கும் நிலையில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 7ஆகக் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளன.
சீனா, ரஸ்யா, கியூபா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளே தற்போது இலங்கைக்குஆதரவாக நிற்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தை பெரும்பாலான நாடுகள் புறக்கணித்துள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதுவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை இரவு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த இராப்போசன விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்.
அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும், 7 நாடுகளின் தூதுவர்கள் மட்டும் அதில் பங்கேற்றதாகவும் ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன
.
No comments:
Post a Comment