Translate

Monday 23 April 2012

எப்பிடி இருந்த யாழ்ப்பாணம் இப்படி ஆகிவிட்டதே, தறி கெட்டுத் திரியும் இளைஞர்களால்


எப்பிடி இருந்த யாழ்ப்பாணம்

எப்பிடி இருந்த யாழ்ப்பாணம் இப்படி ஆகிவிட்டதே என கேட்கும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் சமூகச் சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன.
இளம் மாணவர்களிடையே போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களை தூண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. 


சிறுமிகள் மீதான இளைஞர்களின் துஸ்பிரயோகங்கள், முதியோர் துஸ்பிரயோகம், ஆலயங்களில் விக்கிரகங்கள், உண்டியல்கள் களவாடுதல், பாடசாலை மாணவிகள் திடீரெனக் காணாமல் போதல், 

வீதியோரங்களில் மாலை நேரங்களில் மதுபோதையில் இளைஞர்களின் அட்டகாசம், தடுப்பில் உள்ளவர்களை மீட்டுத்தருவதாக செய்யப்படும் பணமோசடிகள், சிறுவர்களைப் பயன்படுத்தி திருட்டுக்களைச் செய்தல், 

முறையற்ற கர்ப்பம் தரித்தல், திருமணம் செய்வதாகக் காதலித்து பாலியல் உறவின்பின் கைவிடல், சட்ட விரோத கருச்சிதைவுகள் செய்தல், 

மாணவர்கள் சமாந்தரமாக வீதிகளில் பயணித்தல், கைத்தொலைபேசி மூலம் ஆபாசப்படங்கள் அனுப்புதல், பெண்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைசெய்தல், சிறுவர் இல்லங்களில் துஸ்பிரயோகம், வழிப்பறித் திருட்டுக்கள், 

பாவனையற்ற பஸ்தரிப்பு நிலையங்கள், கட்டிடங்களில் மதுப்பிரியர்களின் தகாத செயற்பாடுகள், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாது உணவகங்களில் உணவு தயாரித்தல், சிறுவர்கள் புகைப்பழக்கத்திற்கும் மதுபோதைக்கும் அடிமையாகுதல், 

சிறுவர்களுக்கு வர்தக நிறுவனங்களில் சிகரெட் விற்பனை செய்தல், கசூர்ணா கடற்கரையில் தென்பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் போது நீருக்கடியில் நீந்திச் சென்று அங்கச் சேட்டைகள், 

சிறுவர்களைப் பயன்படுத்தி திருட்டுக்களைச் செய்தல், பாவனையற்ற பஸ்தரிப்பு நிலையங்கள், கட்டிடங்களில் மதுப்பிரியர்களின் தகாத செயற்பாடுகள், ஆகிய குற்றச் செயற்பாடுகள் யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. 

அப்பப்பா சொல்லும் போதே கண்ணைக் கட்டுதே… 

இன்றைய யாழ்ப்பாணம் இப்படித் தான் போய்க் கொண்டிருக்கின்றது…. 

பொலிஸாரின் கண்காணிப்புக்களை அதிகரிப்பதன் மூலமே இவற்றை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment