Translate

Monday 23 April 2012

புரிந்துணர்வுக்கு வந்தால் மாத்திரமே நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நாங்கள்!


தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளை அரசாங்கம் முன்வைப்பதுடன் தமது கட்சியுடன் அரசாங்கம் ஓர் புரிந்துணர்வுக்கு வந்தால் மாத்திரமே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுவது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கருத்திற்கொள்ளும் என அக்கட்சியின் நாடாளுமன்ற...


உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். தேசிய பிரச்சினைக்கு தீர்வு விரைவாக காணப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முட்டைக்கட்டைகள் நீக்கப்பட வேண்டுமெனவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.


இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி. மேற்கண்டவாறு கூறினார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கூடாக கடும் போக்குள்ள கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வருவது தற்போதைய நிலையில் கடினமானது என அவர் தெரிவித்தார்.


எனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அதன் நோக்கத்தை அடைய மாட்டாது என அவர் கூறினார். பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பரந்தளவான யோசனைகளை நாம் சமர்ப்பித்துள்ளோம்.


அரசாங்கத்தின் பதிலை நாம் எதிர்பார்த்துள்ளோம். அதிகார பரவலாக்கல் தொடர்பாக எம்முடன் அடிப்படை புரிந்துணர்வுக்கு வரவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் இத்தெரிவுக்குழுவினால் பலனொன்றும் ஏற்படாது" என சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி. தெரிவித்தார்.

No comments:

Post a Comment