Translate

Wednesday 25 April 2012

திரிகோணமலை விநாயகர் கோவிலை இடிக்க இலங்கை அரசு உத்தரவு


திரிகோணமலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தம்புள்ளா பகுதியில் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவாசலை கடந்த வாரம் புத்த பிச்சுக்கள் தாக்கினர். இதையடுத்து அந்த பள்ளிவாசல் கட்டிடத்தை இடித்துவிட்டு, வேறு இடத்திற்கு பள்ளிவாசல் மாற்றப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. இதனால் அங்குள்ள முஸ்லிம்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சனை தீருவதற்குள் சாலையை விரிவுபடுத்துவதற்காக திரிகோணமலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
திரிகோணமலை மருத்துவமனை வளாகத்தில் 60 ஆண்டு பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. போரில் சேதமடைந்த கோவிலை சீரமைத்துள்ளனர். வரும் ஜூன் மாதம் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சாலையை விரிவுபடுத்துவதற்காக அந்த கோவிலை இடிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்த உத்தரவால் இந்துக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். போருக்குப் பிறகு தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு நாடு திரும்பியவுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்ப்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment