இந்திய எம்பீக்கள் முழுக்க, முழுக்க இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டு மாத்திரம் செயல்படுவார்கள் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசு கட்டிவருவதாக சொல்லப்படும் வீடுகளை பற்றியும், ஐந்து ஆண்டுகளாக ஹட்டன் டிக்கோயாவில் கட்டும் மருத்துவமனை பற்றியும் ஆராய்வதுதான் அவர்களது நோக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த அடிப்படையில், இதற்காகத்தான் இந்திய நாடாளுமன்ற குழு இலங்கை வருகிறது என்றால், அதைவிட அவர்கள் வராமலேயே இருக்கலாம். இந்த அடிப்படையில் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த முடிவு சரியானது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
கடந்த முறை இலங்கை வந்த இந்திய நாடாளுமன்ற தமிழ்நாட்டு எம்பீகளின் தூதுக்குழுவிற்கு திராவிட முன்னேற்ற கழக தலைவரின் மகள் கனிமொழி எம்பி அதிகாரபூர்வமற்ற தலைவராக செயல்பட்டார். இலங்கை விஜயம் தொடர்பில் பல அபத்தமான கருத்துகளை அவர் இலங்கையிலும், பிறகு இந்தியாவிலும் வெளியிட்டார்.
தூதுக்குழுவில் வவுனியாவிற்கு சென்றிருந்த கனிமொழி எம்பி, முகாம்களை பார்வையிட்டபின் வெளியே வந்து அங்கே தமிழ் அகதிகள் சிறப்பாக நடத்தப்படுகிறார்கள் என்ற கருத்துப்பட பேசியிருந்தார். பிறகு ம
No comments:
Post a Comment