Translate

Wednesday, 25 April 2012

மாவோயிசுட்டுகளால் கடத்தப்பட்டுள்ள தமிழ் கலெக்டரை எப்படியாவது விடுவிக்க வேண்டுமென பல மாந்த நேய குரல்கள் இங்கே ஒலிக்கின்றன…



மாவோயிசுட்டுகளால் கடத்தப்பட்டுள்ள தமிழ் கலெக்டரை எப்படியாவது விடுவிக்க வேண்டுமென பல மாந்த நேய குரல்கள் இங்கே ஒலிக்கின்றன…

இந்த புகைப்படத்தில் இருக்கும் மத்வி முகேசுக்கு வயது இரண்டு……. இவனது அப்பா காட்டிற்குள் உணவு தேடி சென்றிருந்த பொழுது தனியாக வீட்டினுள் இருந்த இந்த இரண்டு வயது குழந்தைகளின் விரல்களை நறுக்கி மாந்த நேயத்தை வெளிப்படுத்தியவர்கள் சட்டீஸ்கர் மாநில காவல்துறை, இந்திய துணை இராணுவத்தினர். அரசின் தடுப்பரண்களை மீறி வெளிவந்தது இந்த ஒரு குழந்தையின் புகைப்படம் மட்டும் தான், இது போல ஏகப்பட்ட குழந்தைகள் இந்திய துணை இராணுவம், அதிரடி படைகள் போன்ற இந்திய அரசின் படைகளிடம் தனிமும் சிக்கி சீரழந்த வண்ணம் உள்ளனர். இதுமட்டுமன்றி ஆயிரக்கணக்கான பழங்குடிகளை மாவோயிசுட்டுகள் என்ற பெயரில் அரசு சிறையில் அடைத்து துன்புறுத்தியும் வருகின்றது.

உங்களது குரலில் ஒலிப்பது மாந்த நேயம் என்றால் அது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும், ஒரு சாராருக்கு மட்டும் என்ற மாந்த நேயம் ஒலிப்பதில்லை…………….

1 comment: