Translate

Wednesday 25 April 2012

கிருஸ்ணாவைப் போன்று சுஷ்மாவுக்கும் மகிந்த ராஜபக்ச ஆப்பு!


இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜுக்கு 13வதுஅரசியலமைப்புத் திருத்தத்தையோ 
அதற்கு அப்பாற்பட்டவிடயங்களையோநடைமுறைப்படுத்துவதாகஇலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ச எந்தவாக்குறுதியையும்கொடுக்கவில்லை என்றுஇலங்கை அரசாங்கம்கூறியுள்ளது.
12 பேர் கொண்ட இந்தியநாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி இலங்கை வந்த சுஸ்மா சுவராஜ்,இந்தப் பயணத்தின் முடிவில்கடந்த சனிக்கிழமை கொழும்பில்செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார்.

அப்போது, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வைநடைமுறைப்படுத்தும் பொறுப்பு தனக்கிருப்பதாக இலங்கை ஜனாதிபதிஉறுதியளித்ததாக அவர் கூறியிருந்தார்.
ஆனால் இலங்கை ஜனாதிபதி அவ்வாறான எந்த வாக்குறுதியும் சுஸ்மாசுவராஜுக்கு கொடுக்கவில்லை என்று இலங்கை அரசாங்க வட்டாரங்களைமேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இருமுறை இலங்கை ஜனாதிபதியைசுஸ்மா சுவராஜ் சந்தித்திருந்த போதும்எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறானவாக்குறுதி கொடுக்கப்படவும் இல்லை கோரப்படவும் இல்லை என்று இலங்கைஅரச வட்டாரங்கள் கூறியுள்ளன.
முன்னதாககடந்த ஜனவரி மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியவெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாதமக்கு இலங்கை ஜனாதிபதி13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வை நடைமுறைப்படுத்துவதாகவாக்குறுதி கொடுத்திருப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் பின்னர் அவ்வாறான வாக்குறுதி கொடுக்கப்படவில்லை என்று இலங்கைஅரசாங்கம் கைவிரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1 comment: