Translate

Sunday, 8 April 2012

இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?

கொழும்பு: இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க கூடிய சாத்தியம் அதிகரித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொருளாதாரத் தடை விதிக்கப்படும் நிலையில் ராஜபக்சே அரசு கிளர்ச்சியை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.


மிகச் சிறிய நாடாக இலங்கை, ஐ.நா. தீர்மானத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்படுவது ஏற்புடையது அல்ல என்பதே பெரும்பான்மை நாடுகளின் கருத்தாக உள்ளது.

மேலும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததற்காக சீனாவுடன் நெருங்கிய தொடர்பை வலுப்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதால் பொருளாதாரத் தடைக்கு இந்தியாவும் ஆதரவளிக்கக் கூடும்.

இதனால் இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் இலங்கை மக்கள் தற்போது உள்ள ஆட்சியை மாற்றி அமைக்க முற்படுவர். எனவே எந்நேரமும் பொருளாதாரத் தடைபற்றிய அறிவித்தல் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

துனிசியா, லிபியா, எகிப்து புரட்சிகளின் வரிசையில் விரைவில் இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment