அதிகாரப் பகிர்வு தீர்வாகாது சமவுரிமை வழங்க வேண்டும்; முன்னிலை சோஷலிசக் கட்சி வலியுறுத்து மாகாணசபைகளுக்குக் கூடுதலான அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து விட முடியாது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு சமவுரிமை, சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று முன்னிலை சோஷலிஸக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழர்களுக்கு சமவுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மே மாதத்தில் விசேட வேலைத்திட்ட மொன்றை தமது கட்சி முன்னெடுக்கவுள்ளது என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரசாரச் செயலாளர் புபுது ஜயகொட நேற்று தெரிவித்தார்.
ஜே.வி.பியிலிருந்து பிரிந்துசென்ற கிளர்ச்சிக் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை “முன்னிலை சோஷ லிஸக் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி யொன்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தனர்.
தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயம், அதிகாரப் பரவலாக்கல் உட்பட தமிழர் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கட்சி எவ்வாறானதொரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என அந்தக் கட்சியின் பிரசாரச் செயலரிடம் “உதயன்’ வினவியது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் ஆட்சிப் பீட மேறிய அரசுகள் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதுவித முனைப்பும் காட்டவில்லை. மாறாகத் தமிழர்களை ஏமாற்றியே வந்தன.
மாகாணசபைகளுக்குக் கூடுதலான அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் தேசியப் பிரச்சினை தீரப் போவதில்லை. தமிழர்களுக்கு அரசியல், பொருளாதார ரீதியில் பிரச்சினைகள் உள்ளன. உரிமைகள் முடக்கப்படும் நிலைமைகளும் உள்ளன.
எனவே, மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீரப்போவ தில்லை என்பதே எனது கருத்தாகும். அத்துடன், தமி ழர்களுக்கு நாட்டில் சம வுரிமை வழங்கப்படவேண் டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
தமிழ், முஸ்லிம் மக்க ளுக்கு சமவுரிமைகளை வழங் குமாறு அரசை வலியுறுத் தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை எமது கட்சி மே மாதமளவில் ஆரம்பிக்கும். இது தொடர் பான தகவல்கள் அறிவிக் கப்படும்.
தமிழ் பேசும் மக்களுக்கு சமவுரிமை வழங்கும் வகை யில் அரசமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படுமாயின் அதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடமாட்டோம். மாகாண சபைகளுக்கு அதிகாரங்க ளைப் பகிர்வது மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல என்பதைத் தமிழ் மக்கள் உணரவேண்டும் எனக் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment