Translate

Wednesday, 25 April 2012

ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டதா? : ராமதாஸ் கேள்வி

இலங்கை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  ’’இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்ததாக இலங்கைக்குச் சென்றிருந்த எம்.பி.க்கள் குழுவினர் தெரிவித்தனர்.

ஆனால் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

 
எனவே இலங்கை பயணத்தின்போது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டதா என்பது குறித்து மத்திய அரசும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜும் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment