இளம் பெண்களின் படங்களை பல மின்னஞ்சல்களுக்கு அனுப்பும் கோஷ்டி !
இணைய குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதை தாம் அறிந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இணைய குற்றச்செயல்கள் தொடர்பாக தமக்கு 202 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவற்றில் பல முறைப்பாடுகள், பேஸ்புக் தளத்தில் முறைகேடாக ஊடுருவல் இடம்பெற்றமை தொடர்பானது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம்பெண்களின் புகைப்படங்களை இவர்கள் திருடி அவற்றை அரை நிர்வாணமாக்கி பின்னர் பல மின்னஞ்சல்களுக்கு அதனை அனுப்பப்போவதாக சில கோஷ்டியினர் பெண்களி மிரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்து கப்பம் பெறும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பேற்ற 202 முறைப்பாடுகளில் சுமார் 25 முறைப்பாடுகள் குறித்தே முன்னேற்றகரமான விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும், மிகுதி முறைப்பாடுகள் குறித்து இதுவரை குற்றவாளிகள் எவரும் இனம்காணப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இவ்வாறான குற்றச்செயல்கள் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், பொதுச்சட்டம் என்பவற்றுக்கு எதிரான குற்றங்களாகவும், நம்பிக்கை மோசடி குற்றங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனவாம்.
கணினிகளை செயலிழக்க வைத்தல், இரகசிய தகவல்களை பெற்றுக்கொள்ளல், அவற்றை பயன்படுத்துதல், கணினியில் உள்ள தகவல்களை சேகரித்தல், குழப்புதல், அழித்தல் என்பனவற்றில் ஈடுபடுவோர் 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றச்செயல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவர் என்று தெரிவித்துள்ள பொலிசார், இளம்பெண்களின் புகைப்படங்களை எடுத்து செல்லிடத்தொலைபேசிக்கு அனுப்பும் குற்றச்செயல்களும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment