Translate

Tuesday 24 April 2012

அட்சய திரிதி கவிஞர் இரா .இரவி


பகல் கொள்ளை ஆரம்பம்   அட்சய திரிதி !

உழைக்காமல் உண்ணும் சோம்பேறி
சோதிடன் உளறல் அட்சய திரிதி !

பெருகிட உயிரினமா ?  தங்கம் அட்சய திரிதி !

அடகில் மூழ்கியது வாங்கிய தங்கம்   அட்சய திரிதி !

மூடநம்பிக்கையின் உச்சம்
ஏமாருவதே மிச்சம்
அட்சய திரிதி !

சோதிடன் நகைவணிகன்
கூட்டுக் கொள்ளை
அட்சய திரிதி !

உலோகம் பெருகுமா ?
யோசிக்க வேண்டாமா ?
அட்சய திரிதி !

தங்கத்தின் ஆசை
தகர்த்திடுப் பெண்ணே
அட்சய திரிதி !

கொலை கொள்ளைப் பெருகிடக்
காரணம் தங்கம்
அட்சய திரிதி !

குடும்பத்தின் நிம்மதி
கெடுப்பது
அட்சய திரிதி !

தங்கத்தின் விலை ஏற்றதிற்குக்
காரணம்
அட்சய திரிதி !

தரமற்றத் தங்கம்
தரமென்று விற்கும்
அட்சய திரிதி !

No comments:

Post a Comment