- சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை !
- தமிழீழத்தில் ஐ.நாவின் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை !
- அனைத்துலகத்தின் கண்காணிப்பில் தமிழீழத்தில் பொதுசன வாக்கெடுப்பு !
ஆகிய தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சர்வதேச சமூகம் தனது காத்திரமான பங்களிப்பை இலங்கைத்தீவில் செலுத்த வேண்டுமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்றேலியாவின் பழங்குடி மக்களுக்கான, அவுஸ்றேலிய நாடாளுமன்ற உறுப்பினர் Hon Ken Wyatt அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே, துணை அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள ஆட்சியாளர்களினால், ஈழத்தமிழினத்தின் மீது நடத்தப்பட்டு வரும் இனவழிப்பு தொடர்பிலான ஆவணங்களை முன்னிறுத்தி, தமிழீழ மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை விளக்கிய துணை அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள், ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, தமிழர்களின் நிலைப்பாட்டினை தெரியப்படுத்தினார்.
தமிழீழ மக்களுக்கு நியாயமானதும், நிலையானதுமான அரசியல் தீர்வினைக்காண, அவுஸ்றேலியா தலைமைதாங்க வேண்டும் என வலியுறுத்திய துணை அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் வலயுறுத்தியுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்நிலைப்பாட்டினை கரிசனையோடு கவனத்தில் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், பிற பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இது குறித்து கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளதாக, துணை அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாதம் ஊடகசேவை
Tamil News Circle
No comments:
Post a Comment