இலங்கையில் தம்புள்ளையில் மசூதி அகற்றுவது தொடர்பான விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், இலங்கையில் இந்துக்களின் முக்கிய கோவிலாககக் கருதப்படும் திருக்கேதீஸ்வரம் கோவிலை ஒட்டியுள்ள பகுதியில். ஒரு புத்த கோவில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கவலைகளை வெளியிட்டுள்ளது.
பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலையத்துக்கு அருகில், இலங்கை அரசும்,இராணுவமும் பௌத்த சமயத்தை பரப்பும் நோக்கில் முயற்சிகளை எடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இந்து மாமன்றம், அதற்கு தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையிலும் திருக்கேதீஸ்வரம் ஆலையத்துக்கு அருகில் இன்னமும் இராணுவம் நிலை கொண்டுள்ளது எனவும் அந்த அமைப்பின் பொதுச் செயலர் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
“திருக்கேதீஸ்வர ஆலய சூழலிலே ஒரு புத்தர் சிலை வைப்பதற்கான தேவை இல்லை என்பது எங்களது நிலைப்பாடு” திருக்கேதீஸ்வரம் இருப்பது ஒரு இந்து சமய சூழல், அது ஒரு இந்து சமய புனித பூமியாகப் போற்றப்பட வேண்டும் என்றும் அந்த மாமன்றம் கோரியுள்ளது.
இதை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும் எனவும் நீலகண்டன் கூறுகிறார். இது பாடல்பெற்ற தலம் என்பதால் அதை பெரும் பொருட்செலவில் புனருத்தாரணம் செய்ய இந்திய அரசு முன்வந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை ஜனாதிபதி உட்பட அனைவரின் கவனத்துக்கும் இந்த விஷயம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை இந்துமாமன்றத்தின்
No comments:
Post a Comment