சிவசேனை பற்றி இந்து இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது
ஒருபுறம் மத மாற்றம். மறுபுறம் சிலை வைப்பு. இன்னொரு புறத்தில் இந்து சமய விக்கிரகங்கள் உடைப்பு. இப்படியாக நாலா திசையில் இருந் தும் இந்து சமயத்தை நோக்கி பல் குழல் எறிகணைத் தாக்குதல் நடத்தப் படுகின்றது.
வரலாற்றுப் பெருமைமிக்க இந்து ஆலயங்களின் சிறப்பை சின்னா பின் னப்படுத்த பகீரத முயற்சிகள் நடை பெறுகின்றன.மன்னார் திருக்கேதீஸ் வரத்தில் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் நடந்தேறுகின்றன. ஏன்தான் இப்படி என்று இந்து இளைஞர்கள் ஒருகணம் சிந்திக்க வேண்டும்.அறிக்கைகளில் ஆசிச் செய்திகளில் சைவத்தை வள ர்க்க முடியும் என்று யாரேனும் நினைத்தால் அதுதான் மிகப் பெரும் மடமைத்தனம். சில இந்து அமைப்பு கள் தாங்கள் மட்டுமே இயங்க வேண் டும் என்ற நினைப்போடு செயற்படுகி ன்றன. அறிக்கை எழுதி தங்கள் இருப் பைக் காட்டிக் கொள்வதான செயற்பா டுகள் ஒருபோதும் வெற்றிதரா.இன்று இந்து சமயத்தை வீழ்த்துவதில் மத மாற்ற அமைப்புகள் மிக வேகமாகச் செயற்படுகின்றன. தத்தம் சமயம் சார்ந்த சிலைகளை புதுப்புது இடங்க ளில் நிறுவி உரிமை கொண்டாட இந்த அமைப்புகள் களத்தில் இறங்கி விட்டன. அவர்கள் இங்கு சிலை வைக்க இந்துக் கோயில்களில் இருக் கக்கூடிய பெறுமதியான விக்கிரகங் கள் களவாடப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கு யாருமே இல்லை.
பொதுவில் இந்து சமயத்தின் பெய ரால் இயங்கக்கூடிய அமைப்புகள் சைவ சமயத்தைக் காப்பாற்றத் தவ றிவிட்டன. வெறும் அறிக்கைகளில் இந்து சமயத்தைக் காப்பாற்ற முடியு மென்று இவர்கள் நினைப்பார்களா யின், அதனைச் செய்வதற்கு பெரிய பெரிய பெயர்களில் இந்து அமைப்பு கள் தேவைப்படாது என்றே கூறவே ண்டும். இந்து அமைப்புகள் இயங்கு கின்றன எனில்,திருக்கேதீஸ்வரத்தில் பிற சமய ஊடுருவல் நடந்தது எப் படி? யாழ்ப்பாணத்தில் இந்து ஆலய விக்கிரகங்கள் அழிக்கப்படுவது எங்ங னம்? எல்லாம் வெறும் படோபகாரங் களே அன்றி வேறில்லை.
எனதருமை இந்து இளைஞர்களே! நீங்கள் நாவலரின் பாதையில் சிவ சேனை பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்து அமைப் புகள் இயங்கா அமைப்புகளா கிவிட்ட தால் தாங்களும் செய்யாமல் உங்க ளையும் செய்யவிடாமல் தடுப்பார் கள். இனியும் நீங்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் பிறப்புச் சமயமான இந்து சமயத்தைக் காப்பா ற்றுவது உங்கள் கடமை. அதற்காக பிற சமயங்களை நிந்திக்க வேண் டாம். இந்துக் கடவுளர்களின் சிலை களை புதுப்புது இடங்களில் பிரதி ஷ்டை செய்ய வேண்டாம்.ஆனால் வரலாற்றுப் பெருமைமிக்க இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்க ளுக்குள் ஊடுருவும் சிலைகளை அனுமதிக்காதீர்கள். இதை நீங்கள் செய்யத் தவறினால் இந்து சமயத் தின் எதிர்காலம் வேதனையானதா கவே அமையும்.
No comments:
Post a Comment