கொழும்பு, மே.20: இலங்கை முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள பொன்சேகா விடுதலையாக வழி ஏற்பட்டுள்ளது.
கத்தார் செல்லும் முன்னர் பொன்சேகாவை விடுதலை செய்யும் உத்தரவில் ராஜபட்ச கையெழுத்திட்டதாக அதிபரின் செய்தித்தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார்.
ராஜபட்சவின் உத்தரவையடுத்து நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்ததும் பொன்சேகா விடுவிக்கப்படுவார் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment