Translate

Sunday, 10 June 2012

வருகிற 13.6.12 அன்று சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கேலி சித்திரம் இடம் பெற்றுள்ளதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்.


வருகிற 13.6.12 அன்று சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கேலி சித்திரம் இடம் பெற்றுள்ளதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்.
http://vck.in/vck/?p=575


விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. 10.6.12 புதுவையில் செய்தியாள ர்களுக்கு பேட்டி அளித்தார்.
— with Prince Ennares Periyar and 45 others.

அப்போது அவர், ‘’சி.பி.எஸ்.சி. பாடதிட்டத்தின் 12-ம் வகுப்பு புத்தகத்தில் விடுதலைக்கு பின்னர் இந்திய அரசியல் என்ற தலைப்பில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கேலி சித்திரம் இடம்பெற்றுள்ளது.

பள்ளி மாணவர்கள் மனதில் மொழி உணர்வை விதைக்கும் வகையில் இந்த கார்ட்டூன் அமைந்துள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு ஆர்.கே.லட்சுமணன் என்ற பிரபல கார்ட்டூனிஸ்டு வரைந்த அந்த கார்ட்டூன் பாட புத்தகத்தில் இடம் பெறவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இடஒதுக்கீட்டுக்கு உருவமாக திகழும் அம்பேத்காரை கேலி செய்யும் வகையிலும், மொழி உணர்வை கொச்சைப்படுத்தும் வகையிலும் கேலி சித்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு இதனை நீக்கி இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் பதவி உயர்வுக்காக சுய மதிப்பீடு செய்யும் முறை நடை முறையில் உள்ளது.

இதற்கான விண்ணப்பத்தில் பல்வேறு கோரிக்கைகள் கேட்கப்படும். இதில் தற்போது ஆட்சி மொழியான இந்தியை பரப்ப தங்களின் பங்கு என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

ஒரு அதிகாரி பதவி உயர்வு பெற இந்தி மொழியை பரப்ப வேண்டும் என்ற நடைமுறை மறைமுகமாக திணிக்கப்பட்டுள்ளது.

இந்தி மொழியை பரப்பும் வேலையை செய்தால்தான் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 13-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஜனாதிபதி தேர்தலில் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த தலித்தை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதனை இப்போதும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இருப்பினும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்போம்’’ என்று கூறினார்.

No comments:

Post a Comment