Translate

Sunday, 10 June 2012

சுதந்திரக்கட்சியில் இணைவோருக்கு வேலைவாய்ப்பு :சட்ட நடவடிக்கை‍ எடுக்கப்படும்


சுதந்திரக்கட்சியில் இணைவோருக்கு வேலைவாய்ப்பு :சட்ட நடவடிக்கை‍ எடுக்கப்படும்வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆண்டின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சுதந்திரக்கட்சியில் இணைவோருக்கு வேலைவாய்ப்பு என தெரிவித்துள்ளர். 
 

அவ்வாறான நிலைமையேற்பட்டால் அதற்காக சட்ட நடவடிக்கையெடுக்க தயங்கப்போவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். 
 

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது,

 

அண்மையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படுவது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேர்முகத்தேர்வு இடம்பெற்றது. 
 
இந்த பட்டதாரிகள் நியமனங்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவிய  நிலையிலும் அந்த நியமனங்கள் தொடர்பில் எதுவித அரசியலும் இன்று ஆண்டு  அடிப்படையில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கூட தெரிவித்துள்ளார். 
 

இந்த நிலையில் நேற்று கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் சந்திரபால என்பவர் வந்தாறுமுலையில் அம்பலத்தடி ஆலயத்துக்கு வருமாறு அழைத்து அவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கட்சியில் இணையுமாறும் அல்லாது விட்டால் நியமனங்கள் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார். 
 

இது தொடர்பில் பட்டதாரிகள் எனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
 
 
வேலையற்ற பட்டதாரிகளை பொறுத்தவரையில் பல்வேறு கஸ்ட நிலைக்கு மத்தியில் கல்வி கற்று இன்று ஒரு தொழிலை எதிர்பார்த்து நீண்ட நாட்களாக பல்வேறு துன்பத்துக்குள்ளும் கஸ்டத்துக்குள்ளும் வாழ்ந்து வருகின்றனர். 
 

இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் சந்திரபால போன்றவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதானது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் செயலுக்கு ஒப்பானதாகும். 
 

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பட்டதாரிகள் நியமனம் ஆண்டு அடைப்படையிலும் திறமையின் அடிப்படையிலுமே வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். 
 

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சுதந்திரக்கட்சியின்  அமைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் சந்திரபால பட்டதாரிகளை அழைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் சேர்ந்தால்தான் தொழில் வாய்ப்புமற்றவர்கள் கூறுவது போன்று (முரளிதரன்) இல்லையென தெரிவித்திருப்பதானது முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது. 
 
அத்துடன் அழைப்பு விடுத்த பட்டதாரிகளிடம் தலா நூறு ரூபா பணத்தையும் அமைப்பாளர் பெற்றுள்ளதாகவும் என்னிடம் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் சந்திரபால போன்றவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். 
 

இந்த நியமனங்களில் ஏதாவது அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தயங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment