Translate

Sunday, 3 June 2012

மகிந்தரின் ஊடகப் பிரிவினர் லண்டனை வந்தடைந்தனர் என அறியப்படுகிறது !

பிரித்தானிய இராணி முடி சூடி 60 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அவர் வைர விழா கொண்டாடுகிறார். இதனை ஒட்டி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட விடையம் யாவரும் அறிந்ததே. 4ம் திகதி (திங்கட்கிழமை) பிரித்தானியாவில், இராணியின் வைர விழா வெகுகோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்ள மகிந்தர் பிரித்தானியா வரவுள்ளார். அவர் 3ம் திகதி(அதாவது நாளை) இல்லையேல் 4ம் திகதி காலைக்குள் பிரித்தானியா வந்தாகவேண்டும். தற்போது தய்லாந்தில் இருக்கும் மகிந்தர் எப்போது பிரித்தானியா வருகிறார் என்பதனை இலங்கை அரசு பரம ரகசியமாக வைத்துள்ளது. காரணம் தமிழர் விமானநிலையத்திற்குச் சென்று போராட்டம் நடத்திவிடுவார்கள் என்பது தான் !


இருப்பினும், மகிந்தரின் ஊடகப் பிரிவினர் நேற்றைய தினம் பிரித்தானியா வந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இவர்கள் லண்டனில் ஹைப்பார்க்கில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்துக்குச் சென்றுள்ளனர். பிரித்தானியாவுக்கு மகிந்தர் வரும் தேதியை மற்றும் நேரத்தை மாற்றி மாற்றிச் சொல்லி, தமிழர்களை எவ்வாறு குழப்புவது. இதற்கு எந்த உடகங்களைப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக மந்திர ஆலோசனைகளும் நடத்தப்பட்டுள்ளது. போனமுறை போல மகிந்தரின் நிகழ்சித்திட்டத்தை வெளியிடாமல் பாதுகாக்குமாறு கம்சா இவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளாராம். இதனை அடுத்து இவர்கள் தற்போது செயல்பாட்டில் இறங்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் இயங்கிவரும் PR(public Relations) கம்பெனியான பெல்-பொட்டிங் உதவியும் நாடப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் மேலும்
அறிகிறது.

No comments:

Post a Comment