தமிழ் தேசத்தின் இறைமை முதலில் அங்கீகரிக்கப்பட வேண்டும் TNAயினாலேயே தற்போது முடியும் - கஜேந்திரன்
இலங்கை அரசினது காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்து வைத்த போராட்டம் பரவத்தொடங்கியுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை தெல்லிப்பளையிலும் அதை தொடர்ந்து எதிர்வரும் 26ம் திகதி வன்னி திருமுறிகண்டியினிலும் இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப்போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே இன்று நடந்த எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய தமிழ் தரப்புகளிடையே காணப்பட்ட ஒற்றுமை பல தரப்புக்களையும் நம்பிக்கை கொள்ள வைத்திருந்தது.குறிப்பாக தமிழ் தேசிய மக்கள முன்னணியினது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் வேறுபாடுகளை பார்க்காது கூட்டமைப்பு மற்றும் தமிழ்; தரப்பை சேர்ந்த பல்வேறு தரப்புக்களும் கலந்து கொண்டன.குறிப்பாக மாவை சேனாதிராசா சிறீதரன் சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபை தலைவர்களென பலரும் சமூகமளித்திருந்தனர்.
அங்கு உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் செல்வராசா கஜேந்திரன் தமிழர் தேசத்தில் நடக்கும் நிலப்பறிப்பை தடுக்க தமிழ் தேசத்தின் இறைமை முதலில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கு கூட்டமைப்பினாலேயே தற்போது முடியும். கடந்த ஜெனீவா கூட்டத்தொடரின் போது கூட்டமைப்பு கடிதங்களை அனுப்பி வைத்த 47 நாடுகளுக்கும் மீண்டும் அதே போன்று கடிதங்களை அனுப்பி வைக்கவேண்டும். தொடரும் நில ஆக்கிரமிப்பு குடியேற்றம் மற்றும் பௌத்த மயப்படுத்தல் பற்றி கடிதங்கள் எழுதப்பட வேண்டும். இவற்றை சுட்டிக்காட்டி தமிழ் தேசத்தின் இறைமை முதலில் அங்கீகரிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
எமக்கிடையே சிறு சிறு விடயங்களில் முரண்பாடு; உண்டு. அவை பொது விடயங்களுக்காக வி;ட்டுக்கொடுக்க கூடியவை.அதனை இன்று மக்கள் பிரச்சினைக்கான ஒன்றிணைந்திருக்கும் தமிழர் தரப்புக்கள் வெளிப்படுத்தி நிற்பதாக மாவை சேனாதிராசா தமது உரையில் தெரிவித்தார்
No comments:
Post a Comment