பிரான்சில் சமீபத்திய காலங்களில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நிலைகுறித்தான, கருத்தாடல் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
அனைத்துலக அதிகள் நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் அகதிதஞ்சம் கோரியுள்ளவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களை கவனத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தாடல் நிகழ்வில் சட்டவல்லுனர் Jean Pierre Pesanat அவர்கள் பங்கெடுத்து ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.
இதேவேளை அகதிகள் தங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட் பெற்றுக்கெர்ளக்கூடிய உதவிகள் குறித்தான வழிவகைகள் குறித்து cadet அமைப்பின் பிரதிநிதி Jéroumie Bachet அவர்கள் எடுத்துரைக்கவுள்ளார்.
எதிர்வரும் 24-062012 ஞாயிற்றுக்கிழமை Espace Ardennes, 19 Rues des Ardennes, 75019 Paris (Metro : OURCQ) எனும் முகவரியில் 16 : 00 மாலை மணி முதல் 18 : 00 மணிவரை இக்கருத்தாடல் இடம்பெறுகின்றது.
அகதிதஞ்சம் கோரி பல்வேறு நிலைகளிலும் உள்ள அனைவரையும் இதில் பங்கெடுத்து பயன்பெறுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment