Translate

Sunday, 24 June 2012

தமிழர்கள் மீது ஒரு துரும்பு பட்டாலும் இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும்

இனியும் ஈழத் தமிழர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் தமிழர்கள் மீது ஒரு துரும்பு பட்டாலும் இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும் என்பதை இலங்கை தலைவருக்கு தெரிவித்துக்கொள்வதாகவும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இன்று (23.06.2012) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஈழ சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழர்கள் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும் என்று பேசிய இலங்கை அரசின் அமைச்சர் சாம்பிக ரணவக்கவைக் கண்டித்து ஜூலை 15ஆம் திகதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.

No comments:

Post a Comment