மட்டக்களப்பு மாவட்டம் தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் முத்தையா சுவாமிகள் வசித்த கந்தவேள் எனும் முருகன் ஆலயம் முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவித்துள்ளன.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (01.06.12) பிரவேசித்த இனம் தெரியாதோர் கோவிலின் கருங்கற் தூண்கள், சிறிய கட்டடம் மற்றும் ஆலைய வழிபாட்டுக்கான பொருட்கஎன அனைத்தையும் சேதமாக்கி உள்ளதாக அங்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த ஆலையத்தை சேதமாக்க சென்றவர்கள் சிலர் இராணுவ சீருடையில் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாந்தாமலை பிரதேசமும் அங்குள்ள முருகன் ஆலயமும் அவற்றை அண்மித்த பிரதேசங்களும் வரலாற்று ரீதியாக இந்துக்களின் வழிபாட்டுக்குரிய பகுதிகளாக இருந்துள்ளன.
எனினும் பெரும்பாண்மை இனத்தவர்களும் இராணுவத்தினரும் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை அழித்துவிட்டு, விகாரைகளை அமைப்பதற்கு அண்மைக் காலமாக முயற்சித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகவே கடந்த சில மாதங்களுக்கு முன் இந்துக்களின் பூர்வீக பிரதேசமான கச்சைக்கொடி சுவாமிமலை எனும் பகுதியில்; பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வருகன்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரயநேந்திரன் தனது கண்டனத்தை வெளியிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment