அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வது சுலபமானதல்ல என்பது அரசாங்கத்திற்கு தெரியும்.
அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க முயற்சிக்கின்றது.
காலணித்துவ நாடுகளின் தீர்வுத் திட்டத்தை சகல கட்சிகளினதும் இணக்கப்பாடுடனும் முன்வைப்பதாக வெளிக்காட்டவே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு. இதனால்தான் ஜே.வி.பி. இந்தத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காது என தெரிவித்திருந்தோம்.
வடக்கு மக்கள் தனியான இராச்சியத்தை கோரவில்லை. அதிகாரப் பகிர்வினையும் தற்போது வடக்கு மக்கள் கோரவில்லை. சில நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆணைக்குழுக்கள் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களை அமைக்க வேண்டிய அவசியமில்லை.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் தேவைகளையே அரசாங்கம் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றது என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
களனி பொல்லேகல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment