Translate

Sunday 10 June 2012

கண்களை கட்டி போராளிகள் படுகொலை


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்  போரின் முடிவின் போது கைது செய்யப்படு அல்லது சரணடைந்திருந்த போராள்களை கை கால்களை கட்டி கண்களையும் கட்டி சுட்டுக்கொல்வதற்கு தயாராவது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.


இதே போன்று கண்கள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் காணொளிகள் முன்பு வெளிவந்திருந்த நிலையில் இந்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு வெளியாகிய காணொளிகளில் உள்ள போராளிகளின் தொகையையும் பார்க்க இதில் பல நூறு பொராளிகள் உள்ளமை காணக்கூடியதாக உள்ளது.

நிராயுத பாணியாக சரணடைந்த போராளிகள் கைகள் கால்கள் கட்டப்பட்டு தனித்தனியே நிலத்தில் இருத்தி வைக்கப்பட்டுள்ள காணொளியே வெளியாகியுள்ளது.

இவர்கள் பெரும்பாலும் பின் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருத முடிகிறது.குறிப்பிட்ட காணொளியில் கணிசமாக பெண் போராளிகளும் உள்ளனர்.

போரின் முடிவின் போது சரணடைந்த போராளிகள் தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் தொண்டர் அமைப்புக்களில் முறையிட்டு தேடிவரும் நிலையில் இவ்வாறான காணொளி வெளியாகியுள்ளமை இறுதியில் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு நடந்தது என்ன என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான காணொளிகளை வைத்து தமிழ் அமைப்புக்கள் அல்லது சர்வதேச மனிதநேய அமைப்புக்களின் உதவியுடன் சிறீலங்கா அரசை நீதியின் கூண்டில் ஏற்றுவதற்கு தகுந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று உரிமையுடன் உயர்வு இணையம் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment