சீமான் உட்பட 300 பேர் கைது.
சிங்கள இனவெறி இராணுவத்தின் படுகொலையில் இருந்து தப்பி தாய்த் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சைமடைந்துள்ள ஈழத் தமிழர்களை சட்டத்திற்குப் புறம்பாக அடைத்துவைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி செங்கல்பட்டில் 11.07.2012 அன்று முன் மறியல் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி செல்ல முயன்றபோது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment