Translate

Tuesday 31 July 2012


இலங்கையில் மத சுதந்திரம் மீறப்படுகிறது -

Bookmark and Share
தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தரின் பிரவேசம் தேவாலயம் மீது தாக்குதல்: ஹிலாரி
இலங்கையில் மத சுதந்திரம் மீறப்படுகிறது -
இலங்கையில் மதச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டுள்ளது – அமெரிக்கா
இலங்கையில் மதச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மதத்தின் அடிப்படையாகக் கொண்ட ஒடுக்குமுறைச் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2011ம் ஆண்டுக்கான சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்த கடும்போக்காளர்கள் தாக்குதல் நடத்திய சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மதமாற்றம் தொடர்பிலும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், அண்மைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது மதச் சுதந்திரத்திற்கான இடையூறுகள் மற்றும் ஒடுக்குமுறைச் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசியல் சாசனத்தில் மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பில் சட்டங்கள் காணப்படுகின்ற போதிலும், அரசாங்கம் மதச் சுதந்திரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பகிரங்கமாக மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக அரசியல்வாதிகள் வாக்குறுதி அளித்த போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கின் தமிழர் பகுதிகளில் பௌத்த விஹாரைகள், சிலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் மத சுதந்திரம் மீறப்படுகிறது -
இலங்கையில்  சமுதாய மீறல்கள், மத பாகுபாட்டுச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கடந்த 2011ம் ஆண்டு பதிவாகியுள்ளதென அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கடந்த வருடம்   பௌத்தர்கள் மேற்கொண்ட தாக்குதல் போன்ற சில சமூக மீறல் செயற்பாடுகளால் இலங்கையில் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள 2011ஆம் ஆண்டின் சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அண்மைய ஆண்டில் நடைபெற்ற தாக்குதல்களைவிட கடந்த வருடம் குறைவான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டத்தில் மத சுதந்திரத்தை பாதுகாக்க ஏற்பாடுகள் உள்ளன. அரசாங்கம் பொதுவாக மத சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கிறது. ஆனால் அதற்கு எடுத்துக் காட்டான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. மத சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசின் செயற்பாடுகளில் முன்னேற்றம் அல்லது சரிவு காணப்படவில்லை என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த அசாதாரன செயற்பாடுகள் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திடம் கவலை தெரிவித்ததோடு தேவாலயங்கள் மற்றும் மத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு அந்த நாட்டின் தலைவர்களிடம் வலியுறுத்தியது. 
இதேவேளை வடக்கின்  தமிழ் பிரதேசங்களில் அரசாங்க படையினர் புத்தர் சிலைகளை அமைத்து வருவதாகவும் புலிகள் இருந்த பகுதிகளை அரசாங்கம் சிங்களமயமாக்குவதை இதன் மூலம் காண முடிவதாகவும் தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்; இலங்கையில் மத சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில்  பல சம்பவங்கள் இடம்பெற்றபோது அதற்கு கண்டனம் வெளியிட்ட அரசு, நடைமுறையில் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கும் திட்டத்தில் பிரச்சினை உள்ளதென  அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் வெளியிட்டுள்ள மத சுதந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment