இலங்கை செல்லும் புலம் பெயர் தமிழர்களின் கவனத்திற்கு
இலங்கை ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக கனடாவில் இருந்து செயற்பட்ட புலிகளுடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து, இராணுவப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச சார்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எஸ். ஜெயகாந்தன் என்ற இந்த நபர், நெல்லியடி கரவெட்டி பிரதேசத்தில் பிறந்து, கனடாவில் குடியுரிமை பெற்றவர் என தெரியவந்துள்ளது. இவர் கனடாவில் இருந்து கொண்டு கடந்த காலங்களில், இலங்கைக்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார். திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு ரகசியமான முறையில் சென்றிருந்த போது, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment